கொழும்பு துறைமுக நகரத்திற்கு அருகில் கடலில் மிதந்த யாழ். இளைஞரின் சடலம்

கொழும்பு துறைமுக நகரத்திற்கு அருகில் கடலில் மிதந்த யாழ். இளைஞரின் சடலம்

கொழும்பு துறைமுக நகரத்திற்கு அருகில் கடலில் மிதந்து கொண்டிருந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் கடந்த 28ஆம் திகதி கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய கொழும்பு துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, நிட்டம்புவ – ரணவிருகம சந்திக்கு அருகில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 60 முதல் 65 வயதுக்குட்பட்டவர் என்றும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சடலம் வத்துபிட்டிவல மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )