யாழில் ஹசீஸ் போதைப் பொருளுடன் இளைஞர் கைது

யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் யாழ் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட இரண்டாம் வருட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஊவா பரனகம பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவர் நேற்றைய தினம் (16) யாழ் கந்தர்மடம் பகுதியில் கைது செய்யப்பட்டார்
24 வயதுடைய மேற்படி மாணவனிடம் இருந்து 33 கிராம் 230 மில்லிக்கிராம் ஹசீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது
மேற்படி சந்தேக நபரை இன்றையதினம் (17) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய வேளை எதிர்வரும் 30 திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
சம்வம் தொடர்பான மேலதிக விசாராணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
