மீமுரே கரம்பகொல்ல விபத்து – உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்காக அதிகரிப்பு

மீமுரே கரம்பகொல்ல பகுதியில் நேற்று (20) மாலை வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04 ஆக உயர்வடைந்துள்ளது.
மீரிகம பகுதியைச் சேர்ந்த ஒரு குழு சுற்றுலாவிற்காக மீமுரே பகுதிக்கு சென்றபோது விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மூன்று பெண்கள் உள்ளடங்கலாக நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை விபத்தில் குழந்தையொன்று காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.