சீனா – அமெரிக்க இடையேயான பரஸ்பர வரிவிதிப்பு காலவகாசம் மேலும் 90 நாட்களுக்கு நீட்டிப்பு

சீனா – அமெரிக்க இடையேயான பரஸ்பர வரிவிதிப்பு காலவகாசம் மேலும் 90 நாட்களுக்கு நீட்டிப்பு

சீனாவிற்கான பரஸ்பர வரிவிதிப்பு காலவகாசத்தை மேலும் 90 நாட்களுக்கு அமெரிக்கா நீட்டித்துள்ளது.

இதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, அமெரிக்காவும் சீனாவும் நவம்பர் 10 ஆம் திகதி வரை வரிவிதிப்பு காலவகாசத்தை நீட்டித்துள்ளன.

தற்போது அமெரிக்கா சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 30 வீத வரியும், சீனா அமெரிக்கப் பொருட்களுக்கு 10 வீத வரியும் விதிப்பதாக பெய்ஜிங் மற்றும் வொஷிங்டன் வெளியிட்ட  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு அமெரிக்கா 145 வீத வரி விதிக்கப் போவதாகவும், சீனா 125 வீத வரி விதிப்பதாகவும் தெரிவித்திருந்த நிலையில், கடந்த மாதம் இடம்பெற்ற உயர் மட்ட பேச்சுவார்த்தைகள் சில முக்கிய புரிந்துணர்வுகளுக்கு வழிவகுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த காலவகாச நீட்டிப்பு வர்த்தக ஏற்றத் தாழ்வுகளை சமன் செய்யவும், நியாயமற்ற நடைமுறைகளை தீர்க்கவும் உதவும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

 

Share This