சிங்கப்பூரில் சீரற்ற வானிலை – வெள்ள அபாய எச்சரிக்கை

சிங்கப்பூரில் சீரற்ற வானிலை – வெள்ள அபாய எச்சரிக்கை

சிங்கப்பூரில் கடந்த 19 ஆம் திகதி முதல் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சில இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் பல பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை வரை இடியுடன் கூடிய பலத்த மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை காலை மணி 6.57 நிலவரப்படி, நியூட்டன் வட்டாரத்தில் வெப்பநிலை 22.2 டிகிரி செல்சியசாகக் குறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

2025 ம் ஆண்டில் சிங்கப்பூரின் ஆகக் குறைவான வெப்பநிலை 21.6 டிகிரி செல்சியஸ்.இதுவே இவ்வாண்டில் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள ஆகக் குறைவான வெப்பநிலை. இது ஜனவரி 11ஆம் திகதியன்று நியூட்டனில் பதிவானது.

Share This