சமஸ்கிருதத்தை இழிவாக பேசிய உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக கண்டனம்

சமஸ்கிருத மொழியை இழிவாக பேசியதற்காக தமிழக முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.
மொழி, மத அரசியல் செய்வதை விட்டு மக்கள் நல அரசியலை அவர் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் வளா்ச்சிக்காக மத்திய அரசு 150 கோடி ரூபா மட்டுமே ஒதுக்கியுள்ளது என சுட்டிக்காட்டியிருந்தார்.
ஆனால், செத்துப்போன மொழியான சம்ஸ்கிருதத்துக்கு ரூ.2,400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது’ என குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்நிலையிர் இந்திய அரசியல் சாசன சட்டத்தை அவமதித்து தேர்தலுக்காக மொழி அரசியல் நாடகத்தை அரங்கேற்ற முயற்சிப்பது துரதிஷ்டவசமானது என பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் தெரிவித்துள்ளார்.
