மயோட்டா தீவை புரட்டிப் போட்ட சிண்டோ புயல்
பிரான்ஸின் கட்டுப்பாட்டில் இருக்கும் மயோட்டா தீவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சிண்டோ எனும் புயல் தாக்கியுள்ளது.
இப் புயலில் சிக்கி சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு, 200 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
பல வீடுகள் சேதமடைந்துள்ளன. மற்றும் மின்கம்பங்கள், வீதிகள், கட்டிடங்கள் உட்பட பல கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த சிண்டோ புயல் மிகவும் சக்தி வாய்ந்த சூறாவளி என கூறப்படுகிறது.
இப் புயலினால் கண்டிப்பாக நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.