அறுகம்குடா பகுதியில் இரு இஸ்ரேலிய நாட்டவர்கள் கைது

அறுகம்குடாவில் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இரண்டு இஸ்ரேலிய பிரஜைகள் வெள்ளிக்கிழமை (29) பொத்துவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அறுகம்குடாவில் ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் மற்றும் அவரின் மனைவி மீது இந்த இருவரும் தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொலிஸாரின் கூற்றுப்படி, தாக்குதலுக்குப் பிறகு தம்பதியினர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சந்தேக நபர்கள் இருவரும் 26 வயதுடையவர்கள்.
ஹோட்டல் உரிமையாளரும் அவரது மனைவியும் தங்கள் வாகனத்தில் பயணித்தபோது இரண்டு இஸ்ரேலியர்களும் சாலையைத் தடுத்ததால் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கைத செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.