மாவனெல்லயில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது
மாவனெல்லயில் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவனெல்லை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் மூவரும் மாவனெல்லை ஹிந்தெனிய பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, 8, 100 போதை மாத்திரைகள், சந்தேகநபர்கள் சென்ற வேன் மற்றும் மோட்டார் சைக்கிள்
என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாவனெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 22,24 மற்றும் 25 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.