
மின்சாரம் மற்றும் எரிபொருளை தடையின்றி வழங்குவதே முதன்மை இலக்கு – எரிசக்தி அமைச்சு
மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்தை எவ்விதத் தடையுமின்றி தொடர்ச்சியாக வழங்குவதே அரசின் முதன்மை இலக்கு என புதிய எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர் குமார ஜெயக்கொடியின் பதவி விலகலைத் தொடர்ந்து அமைச்சராகப் பொறுப்பேற்ற அவர், தற்போதைய சூழலில் மின்வெட்டை அமுல்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தேசிய எரிசக்திக் கொள்கையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், அமைச்சு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பின் அவற்றை உரிய விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க சவால் விடுத்தார்.
