முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறைவு
![முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறைவு முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறைவு](https://oruvan.com/wp-content/uploads/2025/02/egg.jpg)
சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் சில்லறை விலைகள் கணிசமாகக் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, சராசரி முட்டையின் விலை 24 ரூபா முதல் 30 வரை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கோழி இறைச்சி ஒரு கிலோ கிராம் 650 ரூபா முதல் 850 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கான தேவை குறைவடைந்ததாலும், உற்பத்தி அதிகரித்ததால் விலை குறைவடைந்துள்ளதாக இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, ஜனவரி 29 ஆம் திகதி முதல் தேவை குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது.