தாழமுக்கத்தின் இன்றைய நிலை

தாழமுக்கத்தின் இன்றைய நிலை

நேற்றைய (24.11.2025) தினம் மலேசியா (Malasia) மற்றும் அதனையொட்டிய மலாக்கா நீரிணைக்கு (Strait of Malacca) மேலாக காணப்பட்ட நன்கமைந்த தாழமுக்க பகுதியானது மெதுவாக மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை (25.11.2025-05.30am) மலாக்கா நீரிணையின் மேலாக காணப்படுகின்றது.

இது அடுத்த வரும் ஆறு மணித்தியாலத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒரு தாழமுக்கமாக (Depression) அதே பிராந்தியத்தில் வலுவடையும்.

அதன் பின்னர் இந்த தாழமுக்கமானது தொடர்ச்சியாக மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அதனையடுத்து வரும் 48 மணித்தியாலத்தில் தெற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஒரு சூறாவளியாக (Cyclonic Storm) வலுவடையும்.

இந்த சூறாவளியின் வளர்ச்சி தொடர்பாக இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களமும், இந்திய வானிலை ஆய்வு மையமும் அவதானித்துக் கொண்டு வருகின்றது.

இதே வேளை நேற்றைய தினம் கன்னியாகுமரி மற்றும் அதனை சூழ உள்ள பிராந்தியத்திற்கு மேலாக காணப்பட்ட மேலடுக்கு காற்று சுழற்சியானது (Upper air circulation) இன்று கன்னியாகுமாரி மற்றும் அதனை சூழ உள்ள தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் இலங்கைக்கு மேலாக இன்று காலை (25.11.2025-05.30am) காணப்படுகின்றது.

இது அடுத்த வரும் 24 மணித்தியாவத்தில் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share This