தமிழகத்தில் தபால்மூல வாக்குப்பதிவு ஆரம்பம்

தமிழகத்தில் தபால்மூல வாக்குப்பதிவு ஆரம்பம்

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப்​ப​திவு எதிர்வரும் 23-ம் திகதி நடை​பெற உள்ளது. இதற்​கான ஏற்​பாடு​களை தேர்​தல் ஆணை​யம் முழு​வீச்​சில் செய்​து வருகிறது.

இதன் பிரகாரம் முதல் கட்​ட​மாக தபால் வாக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்டு வரு​கின்​றன. அந்த வகை​யில் சென்​னை​யில் உள்ள 16 சட்​டப்​பேரவை தொகு​தி​களி​லும் தேர்​தல் பாது​காப்பு மற்​றும் இதர பணி​களில் உள்ள பொலிஸார் இன்​றும், நாளை மறு​தினமும் தபால் வாக்​கு​களைப் பதிவுசெய்ய ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

அதன்​படி சென்​னை​யில் 18,971 பொலி​ஸார் தங்​களது வாக்​கு​களை இன்று பதிவுசெய்ய உள்​ளனர். இவர்​களுக்கு தபால் வாக்​களிப்​ப​தற்​கான படிவம் ஏற்​கெனவே வழங்​கப்​பட்​டுள்​ளது.

சென்​னை​யில் உள்ள 16 சட்​டப்​பேரவை தொகு​தி​களி​லும் பொலிஸாருக்கு ​தனித்​தனி​யாக சிறப்பு வாக்​குப்​ப​திவு மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. அந்​தந்த தொகு​திக்கு உட்​பட்ட காவலர்​கள் தங்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட மையங்​களுக்கு நேரில் சென்று தங்​களின் அடை​யாளச் சான்​றுகளைக் காட்டி தபால் வாக்​கு​களை பதிவு செய்ய​ முடியும்.

வாக்​குப் பதிவு நடை​முறை​கள் அனைத்​தும் தேர்​தல் நடத்​தும் அலு​வலர்​களின் நேரடி மேற்​பார்​வை​யில் நடை​பெற உள்​ளன. மேலும் வாக்​குப் பதிவு​கள் அனைத்​தும் சிசிடிவி கேம​ரா​வில் முழு​மை​யாக பதிவு செய்​யப்படவும் உள்ளன.

“பொலிஸாரின் தபால் வாக்​கு​கள் 100 சதவீதம் நடை​பெற வேண்​டும். எனவே அனைத்து காவலர்​களும் தவறாது வாக்​களிக்க வேண்​டும்” என சென்னை காவல் ஆணை​யர் அபின்​ தினேஷ் மோடக்​ அறி​வுறுத்​தி​யுள்​ளார்​.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )