கைது செய்யப்படுவதற்கு முன்னர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட கருத்து

கைது செய்யப்படுவதற்கு முன்னர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட கருத்து

தான் நாட்டிற்காக மட்டுமே செயற்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் இவ்வாறு கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று சனிக்கிழமை (23) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர்
அகில விராஜ் காரியவசம், ரணில் விக்ரமசிங்கமவின் இந்த குரல் பதிவை ஊடகங்களுக்கு வௌியிட்டார்.

அந்த குரல் பதிவில் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருப்பதாவது,

“தான் தனிப்பட்ட காரணங்களுக்காக அல்ல, நாட்டிற்காக மட்டுமே செயற்பட்டேன்

நான் எப்போதும் நாட்டிற்காகவே உழைத்திருக்கிறேன். நான் தனிப்பட்ட காரணங்களுக்காக உழைத்ததில்லை. இந்த ஆட்சியின் உண்மை முகம் இப்போது வெளிவருகிறது.

எல்லா இடங்களிலும் நடைபெறும் இதுபோன்ற அரசியல் நடவடிக்கைகளை நான் ஏற்றுக்கொள்வதில்லை.” என ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )