மடகஸ்கார் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களுக்கு விளக்கமறியல்

மடகஸ்கார் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களுக்கு விளக்கமறியல்

மடகஸ்கார் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட எட்டு இலங்கை மீனவர்கள் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கடந்த மாதம் 02 ஆம் திகதி அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

உணவு மற்றும் நீர் உள்ளிட்ட சரியான வசதிகள் இன்மையால்; பாதிக்கப்பட்டுள்ளதாக கைதான மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்களை விடுவிப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, மடகாஸ்கரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 08 இலங்கை மீனவர்களை நாட்டிற்கு அழைத்துவர சீஷெல்ஸில் உள்ள இலங்கை தூதரகம் மூலம் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

சட்ட நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக பிரெஞ்சு மற்றும் சிங்கள மொழிகளில் பேசும் மொழிபெயர்ப்பாளர் ஒருவரை மடகாஸ்காருக்கு அனுப்புமாறு சீஷெல்ஸில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.

“ரூட் பாபா 06” என்ற பல நாள் மீன்பிடிக் கப்பல் கடந்த ஏப்ரல் 05 ஆம் திகதி 08 மீனவர்களுடன் வென்னப்புவவிலிருந்து புறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share This