கண்டியிலிருந்து கொழும்புக்கு விசேட ரயில் சேவை

கண்டியிலிருந்து கொழும்புக்கு விசேட ரயில் சேவை

ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையில் பங்கேற்றவர்களைத் திருப்பி அனுப்புவதற்காக நாளை ஞாயிற்றுக்கிழமை (27) கண்டியிலிருந்து கொழும்பு கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (26) இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், கண்டி ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டைக்கு இரவு 8.30 மணிக்கு புறப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்காக 18 ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டைக்கும் கண்டிக்கும் இடையில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில் சேவைகளை 24 ஆம் திகதி முதல் நிறுத்த திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

CATEGORIES
TAGS
Share This