கலாநிதி பட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அறிக்கை

கலாநிதி பட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அறிக்கை

சபாநாயகர் அசோக ரன்வல, தனது கலாநிதி பட்டம் தொடர்பில் எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது கலாநிதி பட்டம் குறித்து சமூக ஊடகங்களில் பல விமர்சன விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

அதற்கு சபாநாயகர் தனது அறிக்கையின் மூலம் தெளிவான பதிலை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது கலாநிதி பட்டம் தொடர்பான அறிக்கைகளை சபாநாயகர் வெளியிடுவார் என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரான அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் போதே தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், சபாநாயகர் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழுவும் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share This