மாலையும் கழுத்துமாக ரவி, கெனிஷா – வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். அண்மையில் சில சர்ச்சைகளில் சிக்கி மக்கள் மத்தியில் பெரும் பேசு பொருளானார்.
இந்த நிலையில், அவர் மாலையும் கழுத்துமாக கெனிஷாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
ரவி மோகன், கடந்த ஆண்டு தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கூறியிருந்தார். அதன் பிறகு அவர் கோவாவை சேர்ந்த பாடகி மற்றும் ஸ்பிரிச்சுவல் ஹீலர் என்று சொல்லப்படும் கெனிஷாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
மேலும், ஜெயம் ரவி என்ற தனது பெயரை ரவி மோகன் என்று மாற்றிய ரவி, கெனிஷாவை தனது வாழ்வின் ஒளி என்று ஒரு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
ரவி மோகன் சமீபத்தில் ஒரு திருமணத்தில் கெனிஷாவுடன் கலந்து கொண்டார். இதையடுத்து இணையத்தில் பலர் இவரை விமர்சிக்க தொடங்கினர்.
இதையடுத்து ரவி மோகன் மீதான சில குற்றச்சாட்டுகளை அடுக்கி ஆர்த்தி ஒரு அறிக்கையை வெளியிட, அதற்கு பதிலளிக்கும் வகையில் ரவி மோகன் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
இணையவாசிகள் பலர், ரவி மோகனின் பிரச்சனைக்கு கெனிஷாதான் காரணம் என்று குற்றம் சுமத்தியிருந்தனர்.
இத்தனையும் சந்தித்த கெனிஷா, இதற்கு எதிராக புகார் கொடுத்து, தன்னை பற்றி அவதூறு பரப்பும் வகையில் இருக்கும் பதிவுகளை அனைவரும் நீக்க வேண்டும் என்று அறிக்கையை வெளியிட்டார்.
இப்போது ரவி மோகன்-ஆர்த்தியின் பிரச்சனை ஒரு வழியாக ஓய்ந்திருக்கும் நிலையில், தற்போது புதிதாக ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரவி மோகன், கெனிஷாவுடன் கோயிலுக்கு சென்றிருக்கிறார். அங்கு இருவரும் மாலையும் கழுத்துமாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர்.