டிரம்புடன் பேச்சுவார்த்தை – முழுமையான போர்நிறுத்தத்தை புறக்கணித்தார் புடின்

டிரம்புடன் பேச்சுவார்த்தை – முழுமையான போர்நிறுத்தத்தை புறக்கணித்தார் புடின்

உக்ரைனின் எரிசக்தி வசதிகள் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒப்புக்கொண்டுள்ளார்.

எனினும், 30 நாள் முழுமையான போர்நிறுத்தத்தை அங்கீகரிக்க புடின் மறுப்பு தெரிவித்துள்ளதாக சர்சதேக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செவ்வாயன்று டிரம்ப் மற்றும் புடின் இடையே தொலைபேசிவழியாக இடம்பெற்ற நீண்ட நேர கலந்துரையாடலை தொடர்ந்து, நிரந்தர அமைதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் உடனடியாக தொடங்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

முன்னதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, எரிசக்தி வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை 30 நாட்களுக்கு நிறுத்துவதற்கான திட்டத்தை தனது நாடு ஆதரிக்கும் என்றார்.

இந்நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல் படியாக, எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு பிரச்சினைகளில் வரையறுக்கப்பட்ட போர்நிறுத்தத்திற்கு டிரம்பும் புடினும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா விரோதப் போக்கை முடிவுக்குக் கொண்டுவருகிறது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால் உக்ரைனுக்கு வழங்கப்படும் இராணுவ மற்றும் உளவுத்துறை உதவிகளை நிறுத்துமாறு இந்த கலந்துரையாடலின் போது புடின் டிரம்பிடம் கேட்டுக் கொண்டார்.

மேலும், போரில் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட நிலம் மற்றும் அப்பகுதியில் உள்ள பல்வேறு மின் உற்பத்தி நிலையங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று புடின் கூறியிருந்தார்.

இந்நிலையில், எரிசக்தி உள்கட்டமைப்பைத் தாக்குவது தொடர்பான போர்நிறுத்தம் ரஷ்யாவிற்கு பயனளிக்கும் என்று வாஷிங்டனை தளமாகக் கொண்ட மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் மூத்த சக ஊழியர் மரியா ஸ்னேகோவயா கூறினார்.

இந்த கலந்துரையாடலை தொடர்ந்து தானும் புடினும் ஒரு போர்நிறுத்தத்தையும் இறுதியில் ஒரு நிரந்தர அமைதி ஒப்பந்தத்தையும் நோக்கி விரைவாகச் செயல்பட ஒப்புக்கொண்டதாகக் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் ரஷ்யா 40க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி, சுமி மற்றும் உக்ரைன் தலைநகரைச் சுற்றியுள்ள கீவ் பகுதி உட்பட பிற பகுதிகளில் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This