உள்ளூர் உற்பத்தி பொருட்களை மட்டுமே கொள்வனவு, விற்பனை செய்யுமாறு பிரதமர் மோடி இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்

உள்ளூர் உற்பத்தி பொருட்களை மட்டுமே கொள்வனவு மற்றும் விற்பனை செய்யுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
மிசோரம், மணிப்பூர், அசாம் மாநிலங்களில் பல்வேறு அரசு நலத்திட்டங்களை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.
உள்ளுர் உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்தால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் அபரிதமாக வளர்ச்சி அடையும் என்றும்
பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, காங்கிரஸ் குறித்து இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய இராணுவத்துக்கு காங்கிரஸ் ஆதரவளிக்கவில்லை என குற்றம் சுமத்திய இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளுக்கு அந்த கட்சி ஆதரவு அளித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.