பாதாள உலகக் குழு உறுப்பினர்களுடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு? நாடு முழுவதும் சிறப்பு விசாரணை

பாதாள உலகக் குழு உறுப்பினர்களுடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு? நாடு முழுவதும் சிறப்பு விசாரணை

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் அரசியல்வாதிகளை அடையாளம் காண, அரசாங்க புலனாய்வு அமைப்புகள் நாடு முழுவதும் இரகசிய விசாரணை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.

சிங்கள் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் மீதும் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது.

பாதாள உலகக் குழுக்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட நான்கு அரசியல்வாதிகள் தொடர்பான குறிப்பிட்ட தகவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளதாகவும், அவர்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவதாகவும் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

சமீபத்தில் கைது செய்யப்பட்ட பல முக்கிய பாதாள உலகத் தலைவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்த முக்கியமான தகவல் கிடைத்ததாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

அரசியல்வாதிகளுக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த தகவல்களை குற்றப் புலனாய்வுத் துறை உறுதிப்படுத்தியவுடன், அவர்களின் கையடக்க தொலைபேசி தரவை ஆய்வு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பாதாள உலகக் குழுக்களுடனான தொடர்புகள், பணப் பரிமாற்றங்கள் மற்றும் பிற முக்கிய பரிவர்த்தனைகள் பற்றிய விரிவான தகவல்கள் வெளிப்படும் என்று புலனாய்வாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

Share This