பாகிஸ்தானின் தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்குமாறு பிரதமர் மோடி அறிவிப்பு

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்குப் பின்னர்,பாதுகாப்பு நிலைமையை மீளாய்வு செய்வதற்கான பாதுகாப்புக் கூட்டத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகித்தார்.
எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் எதிரான விழிப்புணர்வையும் வலுவான பதிலடியையும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புப் படைத் தலைவர்,
ஜெனரல் அனில் சவுகான் மற்றும் முப்படைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பாகிஸ்தானின் எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியது.
பாகிஸ்தானின் எந்தவொரு தாக்குதலுக்கும் கடுமையான பதிலடி கொடுக்குமாறு பிரதமர் மோடி முப்படைத் தலைவர்களிடம்
கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.