கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்த நபர் கைது

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்த நபர் கைது

கட்டுநாயக்க, அடியம்பலம பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முயற்சி செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டு முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த இருவர்  தொழிலதிபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தவிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக துப்பாக்கிதாரி ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டதுடன் மற்றொருவர் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This