இந்தியாவை தாக்குவதற்கான அணு ஆயுதங்கள் தயார் – பாகிஸ்தான்

இந்தியாவை தாக்குவதற்கான அணு ஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் ஹனிப் அப்பாசி தெரிவித்துள்ளார்.
சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தினால் போருக்கு தயாராக வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எம்மிடம் உள்ள இராணுவ ஆயுதங்களும், ஏவுகணைகளும் பார்வைக்கு வைப்பதற்கு அல்ல.
நாட்டின் எந்தெந்த பகுதிகளில் நாம் அணு ஆயுதங்கள் மறைத்து வைத்துள்ளோம் என்று யாருக்கும் தெரியாது.
எம்மிடம் உள்ள அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகள் அனைத்தும் இந்தியாவை நோக்கி மட்டுமே உள்ளன.
இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளன” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 12 பேர் காயமடநை்தனர். இந்த தாக்குதலுக்கு ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்’ என்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளன.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டதுடன் விரைவில் பாகிஸ்தானுக்கு பதிலடி தாக்குதல் கொடுப்பதற்கு மத்திய அரசு தயாராகி வருகிறது என்றும் அறிவித்திருந்தது.
பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்து பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியது. இந்த தீர்மானத்திற்கு பாகிஸ்தான் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.