பிடிபடுவதற்கு முன்னர் வட கொரிய வீரர்களை தற்கொலை செய்துகொள்ளுமாறு அழுத்தம்

பிடிபடுவதற்கு முன்னர் வட கொரிய வீரர்களை தற்கொலை செய்துகொள்ளுமாறு அழுத்தம்

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் போராடும் வட கொரிய வீரர்களிடம், உயிருடன் பிடிபடுவதற்குப் பதிலாக தற்கொலை செய்துகொள்ள பியோங்யாங் அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் திங்களன்று அந்நாட்டின் உளவு அமைப்பின் விளக்கத்திற்குப் பின்னர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“இறந்த வீரர்கள் குறித்துக் கிடைத்த தகவல்களின்படி, வட கொரிய அதிகாரிகள் பிடிபடுவதற்கு முன்னர் தற்கொலை செய்து கொள்ளவோ ​​அல்லது சுயமாக வெடிக்கவோ அழுத்தம் கொடுத்ததாகக் குறிப்பிடுகின்றன” என்று தேசிய புலனாய்வு சேவையின் தகவல்களை மேற்கோள் காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியோங்-க்யூன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் 300க்கும் மேற்பட்ட வட கொரிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 2,700 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ரஷ்யாவிற்கு வட கொரிய துருப்புக்கள் அனுப்பப்படுவது குர்ஸ்க் பகுதியை உள்ளடக்கியதாக விரிவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், போரினால் பாதிக்கப்பட்டுள்ள வட கொரியப் படைகளில் எண்ணிக்கை 3,000ஐத் தாண்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது” என்று சியோலின் தேசிய புலனாய்வு சேவையின் விளக்கத்திற்குப் பின்னர் லீ சியோங்-க்யூன் தெரிவித்துள்ளார்.

இதில் “தோராயமாக 300 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 2,700 பேர் காயமடைந்துள்ளதாகவும்” லீ சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, உடனடி பிடிபடுதலை எதிர்கொண்ட சிப்பாய் ஒருவர், கையெறி குண்டுகளால் தன்னை வெடிக்கச் செய்வதற்கு முன்பு “ஜெனரல் கிம் ஜாங் உன்” என்று கூச்சலிட்டதாக லீ கூறினார்.

தேசிய புலனாய்வு சேவையால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வட கொரியாவைச் சேர்ந்த வீரர்கள் “நவீன போர் பற்றிய புரிதல் இல்லை” என்பதை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ரஷ்யா அவர்களை “அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளுக்கு” வழிவகுக்கும் வகையில் பயன்படுத்துகிறது என்று லீ சியோங்-க்யூன் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This