மதுவரித் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம்

மதுவரித் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம்

மதுவரி ஆணையாளர் நாயகம் பதவிக்கு இலங்கை கடற்படையின் ஓய்வுபெற்ற கொமடோர் எம்.பீ.என்.ஏ. பேமரத்னவை நியமிப்பதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

மதுவரி ஆணையாளர் நாயகம் பதவியில் சேவையாற்றும் இலங்கை உள்நாட்டு இறைவரி சேவையின் விசேட தர அலுவலர் யு.எல்.உதயகுமார பெரேராவுக்கு 10 ஆம் திகதியுடன் 60 வயது பூர்த்தியடைவதால் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.

 

Share This