மத்திய கிழக்கு போர் உலகப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை

மத்திய கிழக்கு போர் உலகப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை

மத்திய கிழக்கின் போர்ச் சூழல் ஏற்கனவே உலகப் பொருளாதாரத்திற்கு ஒரு சுமையாக மாறியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தப் போரின் காலப்பகுதியும் அதன் பரப்பளவும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும் எனக் கருதினால் கூட, உலகப் பொருளாதார வளர்ச்சி 2026 ஆம் ஆண்டில் 3.1 சதவீதமாகவும், 2027 ஆம் ஆண்டில் 3.2 சதவீதமாகவும் குறையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

உலகளாவிய பணவீக்கம் 2026 ஆம் ஆண்டில் சற்றே அதிகரிக்கும் என்றும், 2027 ஆம் ஆண்டில் அது மீண்டும் குறையும் என்றும் சர்வதேச நாணய நிதியம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )