மகேஷ் கம்மன்பிலவுக்கு மீண்டும் விளக்கமறியலில்

பிணையில் விடுவிக்கப்பட்ட விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் மகேஷ் கம்மன்பில மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விவசாயத்துறை அமைச்சின் மேலதிக செயலாளராக மகேஷ் கம்மன்பில கடமையாற்றிய காலத்தில் சீனாவிலிருந்து தரமற்ற உரங்களை இறக்குமதி செய்வதற்காக இடைநிறுத்தப்பட்ட கடன் அறிக்கைகளை மீண்டும் செயற்படுத்த உத்தரவிட்ட குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
பிணை வழங்கப்பட்ட போதிலும் பிணை நிபந்தனைகளை அவர் பூர்த்தி செய்ய இயலாமையால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.