உள்ளூராட்சி தேர்தல் – தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் சட்ட ஆலோசனை அமர்வு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 24 மனுக்கள் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை சட்ட ஆலோசனை அமர்வு நடைபெறவுள்ளது.
இந்த அமர்வில் தொடர்புடைய சட்ட விதிகள் மற்றும் எடுக்கப்பட்ட தீர்மானங்களை விளக்குவதில் கவனம் செலுத்தும்.
இதன்போது தேர்தல் ஆணையாளர் நாயகம் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் உயர் அதிகாரிகள் மற்றும் சட்டமா அதிபர் துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, உள்ளூராட்சித் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்குச் சீட்டுகள் ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி தபால் நிலையத்திற்கு வழங்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.