ஈரானுக்கு எதிரான போருக்கு தயாராகும் இஸ்ரேல்?
![ஈரானுக்கு எதிரான போருக்கு தயாராகும் இஸ்ரேல்? ஈரானுக்கு எதிரான போருக்கு தயாராகும் இஸ்ரேல்?](https://oruvan.com/wp-content/uploads/2025/02/iran.jpg)
ஈரானின் அணு ஆயுத நிலையங்களைத் தாக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் பதவிக் காலத்தில், இதுபோன்ற சாத்தியக்கூறுகள் குறித்து உளவுத்துறை நிறுவனங்கள் ஒரு அறிக்கையை சமர்ப்பித்ததாக வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானிய இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியதும், ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவின் சக்தி குறைந்து வருவதும் மத்திய ஆசியாவில் ஸ்திரமின்மை அதிகரிக்க பங்களித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரான் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் இஸ்ரேல் அமெரிக்காவின் ஆதரவை நாடும் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தாக்குதலின் தன்மை மற்றும் நேரம் அமெரிக்க-இஸ்ரேலிய சந்திப்பைப் பொறுத்தது என்று அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த முடிவானது காசா மற்றும் லெபனானில் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஸ்திரத்தன்மையும் பாதிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரான் மீது விரைவான மறுகட்டமைப்பு உட்பட விரிவான தாக்குதல் தேவை என்று இஸ்ரேலிய ஆய்வாளர்கள் கூறியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைக்கு இஸ்ரேல் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் உதவியை நாடும் என்றும் வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
டிரம்ப், ஜோ பைடனை விட தாக்குதலுக்கு அதிக ஆதரவளிப்பார் என்றும் இஸ்ரேல் நம்புகிறது. ஈரானின் அணுசக்தி நிலையங்களின் சிக்கலான தன்மையைக் கருத்தில் கொண்டு, அமெரிக்க இராணுவ ஆதரவு அவசியம் என்றும் இராணுவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு இராணுவ தளங்கள் மீதான தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் மீது மேலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பலமுறை எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.