கண்டி – அலதெனிய விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

கண்டி – அலதெனிய, குளுகம்மன பஸ் விபத்து தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கண்டி, அலதெனியா பகுதியில் பஸ் ஒன்று வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்துள்ளனர்.
குளுகம்மன பகுதியில் நேற்றிரவு இந்த விபத்து சம்பவித்துள்ளது.
குளுகம்மன பகுதிக்கு சுற்றுலாச் சென்றுள்ள பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்தவர்களில் 15 வயதுக்குட்பட்ட ஒன்பது குழந்தைகள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் காயமடைந்தவர்கள் பேராதனை மற்றும் கண்டி வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.