பாகிஸ்தான் மீதான இந்தியாவின் இராணுவ நடவடிக்கை வருந்தத்தக்கது – சீனா

பாகிஸ்தான் மீதான இந்தியாவின் இராணுவ நடவடிக்கை வருந்தத்தக்கது – சீனா

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று காலை மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையை வருந்தத்தக்கது என சீனா தெரிவித்துள்ளது.

பதற்றத்தைக் குறைப்பதற்கு இரு நாடுகளும் கட்டுப்பாடுடன் செயற்பட வேண்டும் எனவும் சீனா வலியுறுத்தியுள்ளது.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், மேலும் தெரிவித்திருப்பதாவது,

“தற்போதைய நிலைமை குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம். இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகளே. சீனா பயங்கரவாதத்தை முழுமையாக எதிர்க்கிறது.

அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் பரந்த நலன்களை கருத்திற் கொண்டு இரு தரப்பும் கட்டுப்பாடுடன் செயற்பட வேண்டும்.

மேலும் நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Share This