இந்தியப் பிரதமர் மோடிக்கு அர்ஜென்டினாவில் பாரம்பரிய முறையில் வரவேற்பு

இந்தியப் பிரதமர் மோடிக்கு அர்ஜென்டினாவில் பாரம்பரிய முறையில் வரவேற்பு

பிரதமர் மோடி கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 05 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக கானா மற்றும் டிரினிடாட் அண்டு டுபாகோ ஆகிய 2 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட அவர் அந்த இரு நாடுகளின்
தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அப்போது அவருக்கு 02 நாடுகளிலும் அந்நாடுகளின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிலையில், டிரினிடாட் அண்டு டுபாகோ நாட்டில் பிரதமர் மோடியின் பயணம் நிறைவடைந்ததும், அவர் அர்ஜென்டினாவுக்கு புறப்பட்டு சென்றார்.

அர்ஜென்டினாவுக்கு 02 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் எஜீஜா சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை
சென்றிறங்கியதும் பாரம்பரிய முறைப்படி அவருக்கு சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது.

57 ஆண்டுகளில் இந்திய பிரதமரின் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும்.

இந்த பயணத்திற்கு பின்னர், பிரேசில் நாட்டில் நடைபெற உள்ள 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் அந்நாட்டுக்கு செல்லவுள்ளார்.

இதன்பின்னர், இறுதியாக நமீபியா நாட்டுக்கு அவர் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

 

Share This