இந்தியா மூன்றாவது சிறந்த பொருளாதார நாடாக மாறும் – மோடி

இந்தியா மூன்றாவது சிறந்த பொருளாதார நாடாக மாறும் – மோடி

இந்தியா மூன்றாவது சிறந்த பொருளாதார நாடாக மாறுவதை நோக்கி நகர்வதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பெங்களூரின் ஆர்.வி.ரோடு மற்றும் பொம்மசந்திரா இடையே மஞ்சள் வழித்தடத்தில் சாரதி இல்லா மெட்ரோ புகையிரத சேவையையும், 03 வந்தே பாரத் புகையிரத சேவையையும், பிரதமர் மோடி இன்று ஆரம்பி வைத்து கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் கூறினார்.

கடந்த 2014 ஆம் ஆண்டில் இந்தியாவில் 05 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரெயில் சேவை காணப்பட்ட நிலையில் தற்போது 24 நகரங்களில் சுமார் 1,000 கிலோ மீற்றருக்கும் அதிகமான தொலைவுகளில் மெட்ரோ ரெயில் சேவை வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டு வரை இந்தியாவில 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 160 ஆக உயர்வடைந்துள்ளதையும் பிரதமர்டி மோடி இதன்போது சுட்டிக்காட்டினார்.

Share This