உக்ரைனின் இறையாண்மை குறித்து சர் கெய்ர் ஸ்டார்மர், ட்ரம்புடன் பேச்சுவார்த்தை

உக்ரைனின் இறையாண்மையின் முக்கியத்துவம் குறித்து பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் தொலைபேசியில் உரையாடிய அவர் பிரித்தானியாவின் வலுவான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
அடுத்த வாரம் வோஷிங்டன் டிசிக்கு செல்லவுள்ள பிரித்தானிய பிரதமர் டொனால்ட் ட்ரம்பை சந்திக்கவுள்ளார்.
இதேவேளை, சர் கெய்ருடன் பயனுள்ள பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்த உக்ரைன் ஜனாதிபதி
இங்கிலாந்து மற்றும் அங்குள்ள மக்கள் உக்ரைனின் மிகப்பெரிய ஆதரவாளர்களில் ஒருவர் என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் நேற்யை தினம் மேற்கு லண்டனில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு 2,000 பேர் பேரணியாகச் சென்று, உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.