அமெரிக்க – ரசிய அணு ஆயுத பரிசோதனை விவகாரமும் இந்திய நிலைப்பாடும்

அமெரிக்க – ரசிய அணு ஆயுத பரிசோதனை விவகாரமும் இந்திய நிலைப்பாடும்

அணு ஆயுத பரிசோதனை தடை ஒப்பந்தத்தில் (Comprehensive Nuclear-Test-Ban Treaty – CTBT) கைச்சாத்திட்டுள்ள நிலையில், அமரிக்கா அணு ஆயுதப் பிரிசோதனையை நடத்தினால், ரசியாவும் அதனை செய்யும் என ரசிய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளதாக அல்ஜசீரா (aljazeera) ஆங்கில செய்திச் சேவை இன்று வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் ஹங்கேரியில், உக்ரெயன் ரசிய போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்தை ஒன்று நடைபெற இருந்தது. பின்னர் அதனை ட்ரம்ப்  ரத்து செய்தார்.

அதற்கு ஒரு நாள் கழித்து இரண்டு பெரிய ரசிய எண்ணெய் நிறுவனங்கள் மீது தடைகளை விதித்தார். தற்போது அணு ஆயுதப் பரிசோனைக்கு தயாராகுமாறு அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டுள்ளார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

2000 ஆம் ஆண்டில் இருந்து 2025 ஆம் ஆண்டு வரை அதாவது, 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், வட கொரியா தவிர எந்த நாடும் அணு ஆயுத பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை.

வடகொரிய அணு ஆயுதப் பரிசோதனைகளை மேற்கொண்டபோது அமெரிக்கா கண்டித்திருந்தது. இதனால் பெரும் சர்சைகள் ஏற்பட்டிருந்தன.

இப் பின்புலத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற நாள் முதல் வரி அறவீட்டு முறையில் எழுந்து பொருளாதார போர், ஐரோப்பிய – மேற்கு நாடுகள் மத்தியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியிருந்தன.

இப் பின்னணியில் அணு ஆயுத சோதனையை ஆரம்பிக்குமாறு டொனால்ட் ட்ரம் அமெரிக்க பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளமை மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் மத்தியில் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

ட்ரம்பின் இந்த உத்தரவையடுத்து ரசிய பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரெய் பெலோசோவ், “முழுமையான அணு சோதனைகளுக்குத் தயாராகுவது அவசியம்” என அறிவித்துள்ளார்.

இதனால் புவிசார் அரசியல் – இராணுவ சமநிலைப் போட்டிகள் ஆரம்பித்துள்ளன என்று கூறலாம்.

1991-ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் இருந்து காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த அணு ஆயுத சோதனையை மீண்டும் ஆரம்பிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

ரசிய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த உத்தரைவை பிறப்பித்துள்ளார் என்றும் அதன் பிரகாரமே  ரசிய பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரெய் பெலோசோவ் அணு ஆயுதப் பரிசோதனை பற்றிய அறிவிப்பை வெளியி்டுள்ளார் எனவும் ரசிய ஊடகங்கள் கூறுகின்றன.

ரசியாவின் நொவாயயா சிமிலியா (Novaya Zemlya) மாநிலத்தில் உள்ள ஆர்க்டிக் சோதனை மையம், மிகக் குறுகிய காலத்தில் சோதனைகளை நடத்த தயாராகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அணு ஆயுத பரிசோதனை ஆரம்பிக்கப்பட முன்னர் தேவையான தகவல்களை சேகரித்து, ரசிய பாதுகாப்பு சபை பரிசீலித்து, பொருத்தமான பரிந்துரைகளை வழங்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரெய் பெலோசோவ்  உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரம் ரசியாவின் நட்பு நாடான சீனா இந்த விவகாரத்தில் அமைமதியாக உள்ளது. ரசியா அணு ஆயுத பரிசோதனைகளை ஆரம்பித்தால், சீனா அதற்கு ஒத்தழைப்பு வழங்கக் கூடிய வாய்ப்பு உண்டு.

அரசியல் – பொருளாதார மற்றும் இராணுவ ரீதியான உறவுகள் – பரிமாற்றங்களில் சீன- ரசிய உறவு பலமடைந்து வரும் நிலையில், அணு ஆயுதப் பரிசோனை விவகாரம் இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தலாம்.

அதேநேரம் அமெரிக்கா – ரசிய நாடுகளுடன் சமாந்தரமாக உறவை பேணி வரும் இந்தியா இந்த விவகாரத்தில் தொடர்ந்து இரட்டை நிலைப்பாட்டை பேணுமா என்ற கேள்விகள் எழுகின்றன.

சர்வதேச இராஜதந்திர உறவு முறையில் அணிசேராக் கொள்கை என்ற நிலைப்பாட்டை இந்தியா தொடர்ந்தும் பின்பற்றுவதை அமெரிக்கா அனுமதிக்குமா என்பதும் கேள்வியே.

ஏனெனில் இந்தோ – பசுபிக் பிராந்திய விவகாரத்தில் சீனாவுக்கு எதிரான இராணுவ அணுகுமுறைகளில் இந்தியாவின் ஒத்துழைப்பு அமெரிக்காவுக்கு அவசியம் தேவைப்படுகின்றது.

அதேபோன்று, அமெரிக்க ஒத்துழைப்பு இல்லாமல் இந்தோ – பசுபிக் விவகாரத்தை இந்தியா கையாள்வதும் கடினமானது.

ஆகவே அமெரிக்க – ரசிய நாடுகளின் ஆணு ஆயுதப் பரிசோதனைகள் இந்திய இராஜதந்திரத்துக்கு ஒரு பரீட்சையாகவே இருக்கும் என்று பொருள் கொள்ள முடியும்.

Share This