தமிழகத்தில் சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை – வெள்ளியும் புதிய உச்சத்தை தொட்டது

தமிழகத்தில் சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை –  வெள்ளியும் புதிய உச்சத்தை தொட்டது

தமிழகத்தின் சென்​னை​யில் ஆபரண தங்​கத்​தின் விலை இன்று பவுனுக்கு 800 ரூபா உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோன்று வெள்ளி விலையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

உலக அளவில் தங்கத்தை அதிகம் வாங்கும் முன்னணி நாடுகளில் இந்தியாவும் உள்ளது.

தங்கம் விலை சர்வதேச அளவிலான பொருளாதாரம் மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய காரணிகளாக உள்ளன.

இந்நிலையில், சென்​னை​யில் 22 கரட் ஆபரணத் தங்​கத்​தின் விலை இன்று ஒரு கிராம் 100 ரூபா உயர்ந்து 9,315 ரூபாவுக்கும் பவுனுக்கு 800 ரூபா உயர்ந்து 74,520 ரூபாவுக்கும்
விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

24 கரட் தங்​கம் பவுனுக்கு 81,288 ரூபாவுக்கும், 18 கரட் தங்கம் பவுனுக்கு 61,640 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே​போல, வெள்ளி கிரா​முக்கு 02 ரூபா உயர்ந்து 130 ரூபாவுக்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு 2,000 ரூபா உயர்ந்து 1,30,000 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 20 ஆம் திகதி வெள்ளி ஒரு கிராம் 125 ரூபாவுக்கு விற்பனையானமை குறிப்பிடத்தக்கது.

 

Share This