தங்கத்தின் விலை இன்றும் அதிகரிப்பு

தங்கத்தின் விலை இன்றும் அதிகரிப்பு

நாட்டில் தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் 5,000 ரூபா அதிகரித்துள்ளது.

இதன்படி, கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி இன்றைய தினம் 22 கரட் தங்க பவுண் 342,300 ரூபாவாக
விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய தினம் 22 கரட் தங்க பவுண் 337,600 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது.

இதேவேளை, நேற்றைய தினம் 365,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்க பவுண் ஒன்று
இன்றைய தினம் 370,000 ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Share This