தங்கத்தின் விலை குறைந்தது

தங்கத்தின் விலை குறைந்தது

உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைந்ததால், நாட்டில் தங்கத்தின் விலை 13,000 ரூபா குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன்படி, இன்று (04) காலை கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் 22 கரட் தங்க பவுணொன்றின் விலை 376,500 ரூபாவாகக்
குறைந்துள்ளது.

22 கரட் தங்க பவுணொன்றின் விலை நேற்றைய தினம் 388,500 ரூபாவாக காணப்பட்டது.

இதனிடையே நேற்றைய தினம் 420,000 ரூபாவாக காணப்பட்ட 24 கரட் தங்கத்தின் விலை இன்றைய தினம் 407,000 ரூபாவாகக் குறைந்துள்ளதாக கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This