மின்சார சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு

மின்சார சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு

மின்விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் 02 ஆம் இலக்க சரத்திற்கமைய ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படி இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கையை நடாத்தி செல்வதற்கு குறித்த சேவைகள் அத்தியவசியமானவை என்பதையும் இடையூறு அல்லது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் போன்ற விடயங்களை கருத்திற் கொண்டு இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This