பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களு கங்கையின் கிளை ஆறான குடா கங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கணிசமான அளவு மழை பதிவாகியுள்ளதுடன், மேலும் மழை தொடர்ந்து வருகிறது.

அதன்படி, அடுத்த 48 மணித்தியாலத்துக்கு புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைந்துள்ள குடா கங்கை மற்றும் மகுரு கங்கையை அண்டிய தாழ்நில பகுதிகளில் சிறு வெள்ளம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் அதிகம் இருப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, இப் பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் இவ் வழியாக பயணிக்கும் வாகன சாரதிகள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு நீர்ப்பாசனத் துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Share This