வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து ஐ.நா குழுவால் முதலாவது மதிப்பாய்வு – நீதியமைச்சர் ஜெனீவாவுக்கு விஜயம்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து ஐ.நா குழுவால் முதலாவது மதிப்பாய்வு – நீதியமைச்சர் ஜெனீவாவுக்கு விஜயம்

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (24) சுவிட்ஸர்லாந்தின் , ஜெனீவாவுக்கு விஜயம்
மேற்கொள்கிறார்.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஐ.நா குழுவால் இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்படும் முதலாவது மதிப்பாய்வில் கலந்துகொள்வதற்காக அவர் ஜெனீவாவுக்கு செல்கிறார்.

இந்த மீளாய்வுக் கூட்டம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் ஜெனிவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர பிரதிநிதி அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This