Fire திரைப்படம் வெற்றி…பாலாஜிக்கு தங்க செயின் பரிசளித்த தயாரிப்பாளர்

பிக்பொஸ் பாலாஜி நடிப்பில் ஃபயர் திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸானது.
இப் படத்தில் ரச்சிதா மகாலட்சுமி, சாந்தினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இப் படத்தை ஜே.சதீஷ் இயக்கி தயாரித்திருந்தார்.
கடந்த 14 ஆம் திகதி வெளியான இப் படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனால் தயாரிப்பாளர் ஜே.சதீஷ் பாலாஜிக்கு தங்க செயின் ஒன்றை பரிசாகக் கொடுத்துள்ளார்.
இதனை பாலாஜி அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
https://twitter.com/i/status/1892750988211343443