மன்னாரில் கோர விபத்து – 04 வயது சிறுவன் பலி

மன்னாரில் கோர விபத்து – 04 வயது சிறுவன் பலி

மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிகுளம் பகுதியில் இன்று (10) மாலை இடம்பெற்ற விபத்தில் 04 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்

மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் 12 வயது சிறுமி ஆகிய மூவரும் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் மோட்டார் சைக்கிளில்  நானாட்டான் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, எதிர்திசையில் வந்த வாகனமொன்று மோதியதால் விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த வாகனத்தின் சாரதியை கைது செய்த முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

Share This