காலாவதியாகவுள்ள உணவுப் பொருட்கள் சந்தையில் வெளியிடப்படலாம்
பண்டிகைக் காலத்தை இலக்காகக் கொண்டு மனித பாவனைக்கு உதவாத மற்றும் காலாவதியாகவுள்ள உணவுப் பொருட்களை மோசடியான வர்த்தகர்கள் சந்தைக்கு வெளியிட வாய்ப்புகள் உள்ளதாக பொதுசுகாதாார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
பண்டிகைக் காலத்தில் பொருட்களை நுகரும் போது அது தொடர்பில் அதிக அவதானம் செலுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, பண்டிகைக் காலத்தை இலக்காகக் கொண்டு அமைக்கப்படும் தற்காலிக கடைகளில் உணவுப்பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை நுகர்வது தொடர்பில் அதிக அவதானம் செலுத்துமாறு நுகர்வோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தற்காலிக கடைகள் உட்பட அனைத்து கடைகளையும் தொடர்ந்தும் பரிசீலிக்க நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
இதற்காக நாடளாவிய ரீதியில் 2000க்கும் மேற்பட்ட பொதுசுகாதார பரிசோதகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.