Search

Oruvan.com

Oruvan.com
  • முகப்பு
  • மின்னிதழ்
  • இலங்கை
  • உலகம்
  • இந்தியா
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • ஜோதிடம்
Oruvan.com
Homeஇலங்கை
மின் கட்டணத் திருத்தம் – பொதுமக்களின் வாய்மொழி கருத்து இன்று முதல்

மின் கட்டணத் திருத்தம் – பொதுமக்களின் வாய்மொழி கருத்து இன்று முதல்

Kanooshiya PushpakumarDecember 27, 2024 12:07 pm

மின்சாரக் கட்டணத் திருத்த யோசனை தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து வாய்மொழியாக கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (27) ஆரம்பமாகவுள்ளது.

முதலாவது அமர்வு இன்று மத்திய மாகாணத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன், கண்டி மாவட்ட செயலக வளாகத்தில் இது இடம்பெறவுள்ளது.

புத்தாண்டின் முதல் 6 மாதங்களுக்கு மின் கட்டணத்தை திருத்தம் செய்யாமல் பராமரிக்க வேண்டும் என்று சமீபத்தில் மின்சார சபை முன்மொழிந்திருந்தது.

இது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, பதில் யோசனைகளை முன்வைத்து, ​​மின்சாரக் கட்டணத்தை 10 முதல் 20 வீதம் வரை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.

இந்த யோசனைகள் தொடர்பில் கடந்த 17ஆம் திகதி முதல் பொது மக்களிடமிருந்து எழுத்துமூலமான கருத்துக்கள் பெறப்பட்டதுடன், இன்று முதல் ஜனவரி 10ஆம் திகதி வரை 9 மாகாணங்களையும் உள்ளடக்கி வாய்மொழி கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் தமது கருத்துக்களை தெரிவிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தொலைபேசி இலக்கமான 0772 943 193க்கு தொடர்பு கொண்டு பதிவு செய்ய முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாய்மொழி மூலமும் எழுத்து மூலமும் கருத்துகளைப் பெற்ற பின்னர் ஜனவரி 17ஆம் திகதி தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர்
ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES இலங்கை
TAGS BeginsElectricity tariffpublic feedbackrevisiontoday
Share This

AUTHORKanooshiya PushpakumarKanooshiya Pushpakumar

NEWER POSTமாணவி மீது பாலியல் வன்கொடுமை – தன்னை தானே சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை
OLDER POSTமன்மோகன் சிங் மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள் இரங்கல்

விளையாட்டுEXPLORE ALL

இங்கிலாந்து அணி வீரருக்கு அபராதம்!

இங்கிலாந்து அணி வீரருக்கு அபராதம்!

January 8, 2026 3:57 pm
பங்களாதேஸில் ஐ.பி.எல். தொடரை ஒளிபரப்ப தடை

பங்களாதேஸில் ஐ.பி.எல். தொடரை ஒளிபரப்ப தடை

January 6, 2026 2:08 pm
இந்த வருடத்தின் முதல் சதத்தை  பதிவு செய்தார் ஜோ ரூட்

இந்த வருடத்தின் முதல் சதத்தை  பதிவு செய்தார் ஜோ ரூட்

January 6, 2026 11:06 am
இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார் ஷாருஜன் சண்முகநாதன்

இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார் ஷாருஜன் சண்முகநாதன்

January 5, 2026 12:53 pm
டித்வா பேரிடர் நிவாரணப் பணி!! இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய தீர்மானம்

டித்வா பேரிடர் நிவாரணப் பணி!! இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய தீர்மானம்

January 2, 2026 4:28 pm

உலகம்EXPLORE ALL

பெருவில் நிலநடுக்கம்

பெருவில் நிலநடுக்கம்

January 8, 2026 4:11 pm
வெள்ளை மாளிகையில் இருந்து வெளியான முக்கிய அறிவிப்பு – 66 சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகல்

வெள்ளை மாளிகையில் இருந்து வெளியான முக்கிய அறிவிப்பு – 66 சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகல்

January 8, 2026 1:23 pm
பிரித்தானியாவின் வேலை விசா தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு

பிரித்தானியாவின் வேலை விசா தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு

January 8, 2026 11:29 am
லண்டனில் பலஸ்தீனத்திற்கான அதிகாரபூர்வ தூதரகம் திறப்பு – பிரித்தானியாவின் அங்கீகாரத்தின் அடுத்த கட்டம்

லண்டனில் பலஸ்தீனத்திற்கான அதிகாரபூர்வ தூதரகம் திறப்பு – பிரித்தானியாவின் அங்கீகாரத்தின் அடுத்த கட்டம்

January 8, 2026 11:02 am
ரஷ்யாவை குறிவைக்கும் டிரம்ப்!! எண்ணெய் டேங்கரைக் கைப்பற்றிய அமெரிக்க படை

ரஷ்யாவை குறிவைக்கும் டிரம்ப்!! எண்ணெய் டேங்கரைக் கைப்பற்றிய அமெரிக்க படை

January 8, 2026 9:43 am
Oruvan.com
SEARCH SOMETHING
© 2025 Oruvan.com. All rights reserved.
  • Privacy Policy
  • Contact Us