ரணில் மீது டலஸ் குற்றச்சாட்டு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவ்வித நியாயமான காரணமும் இன்றி தேர்தலை ஒத்திவைத்தார் எனவும், இதுவொரு கூட்டு ஊழலுக்குப் பிறகு செய்யப்பட்ட அரசியல் கருக்கலைப்பு மற்றும் நிதி ரீதியாக செய்யப்பட்ட பொருளாதாரக் கொலை என்று சுதந்திர மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் டலஸ் அழகப்பெருமவினால் ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக செலவிடப்பட்ட 72 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் விரயமானது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயார் எனவும் சுதந்திர மக்கள் பேரவையின் தலைவர் டலஸ் அழகப்பெரும தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.