தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் – பிரபல கட்சியின் உறுப்பினரும் கைது

தெற்கு கடற்கரையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகில் இருந்து பெருமளவான போதைப்பொருள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டார்.
பன்னல பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியில் முன்னாள் உறுப்பினர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை கடற்படையினர் நேற்று (20) பிற்பகல் பல நாள் மீன்பிடி படகையும், அதில் இருந்த ஆறு மீனவர்களையும் தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.
அதன்படி, ஐந்து பைகளில் நூறு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட 115 கிலோகிராமுக்கு மேற்பட்ட ஹெராயினும், 13 பைகளில் 200 பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட 261 கிலோகிராமுக்கு மேற்பட்ட ஐஸ் போதைப் பொருளும் படகில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன.
இதற்கிடையில், இந்த போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டபோது, ரிவால்வர், கைத்துப்பாக்கி மற்றும் இரண்டு மகசின்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
