Category: இலங்கை
புதிய மது விற்பனை உரிமத்தை இரத்து செய்ய முனைந்தால் நீதிமன்றத்தை நாட வேண்டி ஏற்படும்
போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்திற்கு இவ்வருடம் புதிதாக வழங்கப்பட்ட மதுபான விற்பனை நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை, பிரதேச மக்களின் கடும் எதிர்ப்பை கருத்திற்கொண்டு மீளாய்வு செய்வதற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கால அவகாசம் கோரியுள்ளது. முறையாக ... Read More
போதைப்பொருள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
சிறைச்சாலைகளில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ... Read More
இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வு குறைந்த செலவில் – பொது மக்கள் பார்வையிடவும் சந்தர்ப்பம்
இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வை குறைந்த செலவில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, இந்நிகழ்வு தேசத்தின் ... Read More
அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி மன்னாரில் கையெழுத்துப் போராட்டம்
போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி மன்னாரில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் பஸ் தரிப்பு நிலையத்துக்கு ... Read More
புத்தாண்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
2025 ஆம் ஆண்டை வரவேற்பதற்காக பெருந்தொகையான மக்கள் நாளை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31) காலி முகத்திடல் வளாகத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. ... Read More
மூன்று மாதங்களுக்குள் நாட்டை ஸ்திரப்படுத்த முடிந்துள்ளது – அமைச்சர் நலிந்த
பதவியேற்று மூன்று மாதங்களுக்குள் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு அரசாங்கத்தால் முடிந்துள்ளதாக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக இன்று திங்கட்கிழமை பதவியேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு ... Read More
2025 நடுப் பகுதியில் மாகாண சபைத் தேர்தல் – அநுர அரசு திட்டம்
1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் சட்டத்தின் கீழ், 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்தை இரத்துச் செய்வதன் மூலம் நீண்ட காலமாகத் ... Read More
இந்த அரசாங்கத்தின் கீழாவது ஜோசப் பரராஜசிங்கம் கொலைக்கு நீதி கிடைக்குமா?
ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் முதல் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பிரதிநிதிக்கு தற்போதைய ஆட்சியிலாவது நீதி கிடைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக அந்த மாகாணத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ... Read More
“காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஐ.நாவே நீதியைப் பெற்றுத் தா” – வவுனியாவில் உறவுகள் கவனவீர்ப்புப் போராட்டம்
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஐ.நாவே நீதியைப் பெற்றுத் தா எனத் தெரிவித்து இன்று கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பஸ் நிலையம் முன்பாக இந்தப் ... Read More
சர்வதேச நீதி வேண்டி யாழில் ஆர்ப்பாட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சர்வதேச நீதி வேண்டி இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர். வடக்கு மாகாணத்தின் மாவட்டங்கள் தோறும் மாதாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் ஓர் அங்கமாகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ... Read More
மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளராக ரவீந்திர மனோஜ் நியமனம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளராக சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் கமகே நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு 07 இல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நியமனக் கடிதம் கையளிக்கப்பட்டது. ... Read More
காட்டு யானைகளின் பிரச்சினைக்குத் தீர்வு கோரி போராட்டம்
அனுராதபுரத்தில் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழையும் பிரச்சினைக்கு தீர்வுக் கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தந்திரிமலை பிரதான வீதியின் ஓயாமடுவ பகுதியில் இன்று திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. யானைகளால் பயிர்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக போராட்டக்காரர்கள் ... Read More












