வீட்டுக்குள் கருவண்டு வருகிறதா? செய்வினை ஏவலாக இருக்கலாம்

வீட்டுக்குள் கருவண்டு வருகிறதா? செய்வினை ஏவலாக இருக்கலாம்

ஒரு வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருக்கும்போது அதன் தாக்கம் பல வழிகளிலும் நமக்கு அதனை எடுத்துக் காட்டும்.

இந்நிலையில் சில உயிரினங்கள் வீட்டுக்குள் வருவதை வைத்து அந்த வீட்டில் பில்லி, சூனியம், ஏவல் போன்ற பிரச்சினைகள் இருப்பதாக அர்த்தம்.

அதன்படி, பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பர். அந்த பாம்பு வீட்டுக்குள் வருவது அரிது. அவ்வாறு பாம்பு வீட்டுக்குள் வந்தால் அக் குடும்பத்தில் ஏதோ மனக்கசப்பு வரப் போவதாக அர்த்தம்.

அதேபோல் வீட்டுக்குள் பூரான் வந்தால், பணக்கஷ்டம், மனக் கஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு.

அதேசமயம் வீட்டுக்குள் இரத்தக் காயத்துடன் வௌவால் வரக்கூடாது. இது கெட்ட சகுனத்துக்கான அறிகுறி. அதிலும் பகல் நேரத்தில் வந்தால் செய்வினையால் ஒரு இழப்பு நிகழும் என அர்த்தம்.

வீட்டுக்குள் தேரை நுழைந்தால் கணவன் மனைவிக்குள் செய்வினையால் சண்டை வர வாய்ப்புண்டு.

சாரை சாரையாக வீட்டுக்குள் எறும்பு வந்தால் உறவினர்கள் சண்டையிட்டு பிரிந்து விடுவார்கள் என்று அர்த்தம்.

கருவண்டு வீட்டுக்குள் நுழைந்தால் சகுனம் சரியில்லை என்று அர்த்தம். கருவண்டு மூலம் செய்வினை செய்து அனுப்ப முடியும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக கருவண்டு நம் வீட்டுக்குள் வட்டமடித்து சுற்றி சுவரில் முட்டிக்கொண்டு இறந்துபோனால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Share This